நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் இதுவரை கண்டறியப்படாத மேலும் 2 மனிதப்புதைகுழிகள்! சிறையிலிருந்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சோமரத்ன ராஜபக்ஷ
இடியுடன் கூடிய மழை
மேலும், மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான முதல் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.