இ.போ.ச பேருந்தில் மோதி விபத்திற்குள்ளான முச்சக்கரவண்டி - இருவர் படுகாயம்
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியில் கவிழ்ந்து, எதிர்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (22.12.2025) காலை 10:30 மணியளவில் நாவலப்பிட்டி, போகஹவத்தை வழியாக கொத்மலை மகாவெலிகம வீதி உள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் விபத்து தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |