வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞர்கள் மூவர் கைது
வவுனியாவில் கஞ்சா பொதிகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவரினை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று இன்று சென்ற பொலிஸார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது உடமையில் கஞ்சாவினை சிறுசிறு பொதிகளாக வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிகுளத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 மில்லிகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த 18, 21,22 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.