சிறுமியை தாக்கி கொலை செய்த முச்சக்கர வண்டி சாரதி
சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்து அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய 15 வயதான சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு, உடலை வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்ற 26 வயதான முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமி இன்னுமொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில், சந்தேகர் சிறுமியை தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளதுடன் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமி இறந்து போனதை அறியாத உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சந்தேக நபர்

சிறுமி இறந்து போனதை அறியாத சந்தேக நபர் நேற்று காலை தனது நண்பரின் வாகனத்தில் சிறுமியில் உடலை கம்பஹா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவின் ஊழியர்கள் உடலை பரிசோதித்த போது சிறுமி இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடலை வைத்தியசாலையில் கைவிட்டு, இரண்டு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் கம்பஹா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியின் உடலை வைத்தியசாலையில் கைவிட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரையும் போம்முல்ல பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
சிறுமியை தாக்கி கொலை செய்த நபர் போம்முல்ல பொலிஸ் பிரிவை சேர்ந்த 26 வயதான சஞ்சு என அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.
வெயங்கொடை கட்டுவஸ்கொட பிரசேத்தை சேர்ந்த இலந்தாரி பொடிகே நதிசி பிரியங்கனி தத்சரணி என்ற 15 வது சிறுமியே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியை காதலித்த சிறுமி

இந்த சிறுமி முச்சக்கர வண்டி சாரதியை காதலித்து வந்துள்ளதுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முச்சக்கர வண்டி சாரதியுடன் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரையும் சிறுமியையும் கைது செய்து பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அப்போது சிறுமிக்கு 14 வயது எனவும் சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதிக்கு 25 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேரும் விரும்பி ஒன்றாக வசித்து வந்த போதிலும் சிறுமி திருமணம் செய்யும் வயதுடையவர் அல்ல என்பதால், அவரை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், முச்சக்கர வண்டி சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
கொழும்பில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமியை சந்தேக நபர் நான்கு மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று போம்முல்ல புலன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் தங்க வைத்துள்ளார். அங்கு இவர்கள் கணவன், மனைவியாக வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சிறுமி வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தில் சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக தாக்கியுள்ளதுடன் தாக்குதலில் சிறுமி உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போம்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.