குழு மோதலில் முச்சக்கர வண்டி சாரதி கொலை! மற்றொருவர் காயம்
பாணந்துறை - பின்வத்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் பின்வத்த, உபோசதாராம வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பண முரண்பாடு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும், கொலை செய்த நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri