வவுனியா சென்ற ரயில் மோதி விபத்து - தாய், தந்தை, மகள், மருமகள் பலி
காலி - பூஸா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலியத்த பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலில் இந்த முச்சக்கர வண்டி இன்று மோதுண்டுள்ளது.
பூசா பகுதியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக தகவல் - கமல்









மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் News Lankasri
