வீதிச் சோதனையின் போது சிக்கிய கனரக வாகனம்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கனரக வாகனத்தில் சட்டவிரோதமாக 410 சிப்பி மூட்டைகளை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை வாழைச்சேனை நாவலடி சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனையில் இருந்து பயணித்த கனரக வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக தலா 50 கிலோகிராம் கொண்ட 410 சிப்பி மூட்டைகள் குருநாகலுக்கு கடத்திச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிப்பியுடன் கனரக வாகனம் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan