பேராதனை பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் மூவர் பதவியிலிருந்து நீக்கம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தால், பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பணி பொறியாளர் மற்றும் பணி கண்காணிப்பாளர் ஆகியோரே ஏனைய இருவர்களாவர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் முன் அனுமதி இன்றி இந்த மூன்று அதிகாரிகளும், பணி நேரத்தில் பதிவாளரின் வீட்டைப் பழுது பார்ப்பதற்காகத் தொழிலாளர்கள், பல்கலைக்கழக வேலைத் துறையின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அண்மையிலேயே நியமனங்களை, ஏற்றதாகவும், அவர்கள் நன்னடத்தை காலத்திலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று அதிகாரிகளும் தங்கள் விளக்கத்தைச் சமர்ப்பித்த பின்னரே, பணிகளிலிருந்து தடை செய்துள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.





காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
