ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீ விபத்தில் பலி - சந்தோஷத்தால் ஏற்பட்ட பெரும் சோகம்
அநுராதபுரம் - எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்ததுடன், பிள்ளைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்தில் 10 வயது மகள் மற்றும் 5 வருயதுடைய மகன் உயிரிழந்துள்னர். இந்த விபத்தில் உயிரிழந்த தாய் 30 வயதுடையவர் எனவும் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் கணவர் 37 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி இம்முறை புலமைபரிசில் பரீட்சை எழுதியுள்ளார். 80 புள்ளிகளை பெற்ற போதிலும் அதனால் மகிழ்ச்சியடைந்த தாயார் நேற்று இரவு மகளுக்காக பலகாரம் செய்துள்ளதுள்ளார்.
இரவு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடன் மகளின் புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகளை அந்த குடும்பத்தினர் கொண்டாடியதாக அயல் வீட்டு பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகன் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் அந்த கொண்டாட்டத்தையும் அவர்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு கொண்டாட்டத்தின் பின்னர் வழமை போன்று இந்த குடும்பத்தினர் உறங்க சென்றுள்ளனர். இதன் போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ விபத்தை அவதானித்த அயல் வீட்டவர்கள் உடனடியாக அயலவர்களை அழைத்த போதிலும் தீ முழுமையாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.