வெவ்வேறு இடங்களில் தொடருந்துகளில் மோதுண்டு மூவர் உயிரிழப்பு!
வெவ்வேறு இடங்களில் தொடருந்துகளில் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - கொழும்பு நோக்கி வந்த தொடருந்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - புறக்கோட்டை
கல்கிசைச் சேர்ந்த 28 வயது இளைஞரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதானை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த 71 வயது வயோதிபரே பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருதானைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
வாத்துவ - தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் கடவைக்கு அருகில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாத்துவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
