நள்ளிரவில் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் பலி
புதிய இணைப்பு
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தி சாரதி மற்றும் இரு பயணிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பேருந்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போதே, பார ஊர்தி, குறித்த பேருந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போதே, பார ஊர்தி, குறித்த பேருந்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு
சம்பவத்தின்போது சொகுசு பேருந்தின் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர் அவசர சேவை வாகனம் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - யது
![Gallery](https://cdn.ibcstack.com/article/75787c9e-baf7-43ef-849b-bdf3576d54ce/24-667b6c52bed3f.webp)
![முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/31aa1584-3fbc-429a-89c7-47b47a51c056/24-667a91eb242ac-sm.webp)
முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு News Lankasri
![நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... வெயிட்டு தான்](https://cdn.ibcstack.com/article/ecd13ff3-5f5a-476d-a3d4-507f2d20f2d1/24-667a39269ab74-sm.webp)
நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... வெயிட்டு தான் Cineulagam
![Sundaikaai Thuvayal: வயிற்று பிரச்சினைக்கு குட்பை கூறும் சுண்டைக்காய்... துவையல் செய்வது எப்படி?](https://cdn.ibcstack.com/article/4d3dc847-2324-4ef2-856c-2dd5bc4eb6db/24-667a80ed233a6-sm.webp)