கொக்குத்தொடுவாயில் யானை துரத்தியதில் மூவர் காயம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் தெற்கு பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடி பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து வேலை செய்துகொண்டிருந்தவர்களை துரத்தியுள்ளது. யானை துரத்தியதை கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியதுடன் அதன்போது, 3 பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri