இரவில் பாதையில் முறிந்து விழுந்த மரம்! மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் பாரிய மரம் ஒன்று திடீரென சரிந்து வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்துள்ளது.
விபத்து
இதனால் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2025) இரவு 08.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு-கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள பத்தன பகுதியை நோக்கி பயணித்த கார் ஒன்றின் மீதே இவ்வாறு மரம் சரிந்து விழுந்துள்ளதுடன் காருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த காரில் சாரதி மாத்திரம் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வட்டவலை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து மூன்று மணிநேரத்திற்கு பின்னர் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.





குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam