யாழில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள்! தேடுதல் பணி ஆரம்பம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து மீன்பிடிக்குச் சென்ற படகு நேற்று அதிகாலை (30.03.2026) புறப்பட்டும், இன்று (31.03.2026) அதிகாலை வரை கரை திரும்பாத நிலையில், அதில் பயணித்த மூவரும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
படகு வழக்கம் போல் கரை திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீண்ட நேரமாக கரை திரும்பாததையடுத்து உறவினர்கள் மற்றும் சக கடற்றொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேடுதல் பணி ஆரம்பம்
உறவினர்கள் தெரிவித்திருப்பதன் படி, காணாமல்போன படகில் மூன்று கடற்றொழிலாளர்கள் பயணித்துள்ளனர். எனினும் அவர்களின் விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகையும் தேடி கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.
அதேசமயம், அப்பகுதி கடற்றொழிலாளர்களும் இணைந்து கடல் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடலில் நிலவும் சீரற்ற காலநிலை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக படகு திசை மாறி சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri