பிரேஸிலில் சோகம் : கிறிஸ்துமஸ் கேக் உட்கொண்ட மூவர் உயிரிழப்பு
பிரேஸிலில் (Brazil) கேக் உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த கேக்கில் ஆர்சனிக் (Arsenic) எனப்படும் ஒரு இரசாயண பதார்த்தம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டுபிடிப்பு
இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் ஐவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பிரேஸிலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களில் மூவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் காலாவதியான பல உணவுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |