மூன்று நாட்களுக்கு தொடரவிருக்கும் முல்லைத்தீவு அபிவிருத்தி கூட்டங்கள்
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்திக் கூட்டங்கள், இன்று (14.02.2024) தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, முல்லைத்தீவு - வெலிஓயா பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டமானது, இன்று காலை (14.02.2024 ) 9.30 மணியளவிலும், கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நண்பகல் 12.00 மணியளவிலும் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாலை 3.00 மணியளவிலும் நடைபெற்றுள்ளன.
தொடர் அபிவிருத்திக்குழுக்கூட்டம்
மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.00 மணியளவில் துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டமும் நண்பல் 12.00 மணியளவில் மாந்தை - கிழக்கு அபிவிருத்திக்குழுக்கூட்டமும், மாலை3.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டமானது, எதிர்வரும் 16ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு மூன்று பிரதேச அபிவிருத்திக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் கேட்டறிந்து திட்டமிடுவார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
