மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சந்தையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றையடுத்து பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.கிபிசுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் மரக்கறி வியாபாரிகள் 32 பேரிடம் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தொற்று அதிகரித்ததன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ மற்றும் மாநகரசபை உட்பட பல அரச நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன் மாநகர ஆணையாளர் உட்பட பலர் தொற்றுக்கு உள்ளாகித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
