பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் மூவர் யாழில் அதிரடி கைது
இலங்கை கடற்படையினர் இன்று காலை யாழ்ப்பாணம், கோவிலம் கடற்பகுதியில் நடத்திய சிறப்பு சோதனையில் 98.500 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோத செயலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகொன்றும் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவானது சுமார் 29 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி இந்த சோதனை நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும், கிராஞ்சி, பேசாலை மற்றும் பூனரி பகுதியில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை நாட்டை சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri
