துப்பாக்கிகளுடன் மூவர் கைது
உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கேகாலை, நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேபோக பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கித்துல்கல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி, வெலிகோபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹமடித்த பிரதேசத்தில், வெலிகோபொல பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்குரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25, 28 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri