வவுனியாவில் விசேட அதிரடி படையினரால் மூவர் கைது
வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்திடமானவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த யானை தந்த கஜமுத்துக்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுடைய லியனகமக- மகாவ, 50 வயதுடைய கோயிலகெதர -மகாவ, 50 வயது நிக்கரவெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களும், அவர்களிடம் மீட்கப்பட்ட யானை தந்த கஜமுத்துக்களும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
