யாழில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கைது நடவடிக்கை
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் நேற்றையதினம் (13.11.2022) உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
இதன்போது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், குட்டியப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 55 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 65 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட ஹெரோயினுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இளவாலையில் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது
இன்றையதினம் (14.11.2022) இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் 21 லீட்டர் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 வயதுப் பெண் 16 லீட்டர் கசிப்புடனும், 42 வயதுப் பெண் 5 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெரோயினுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!
நேற்றையதினம் (13.11.2022) தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி - கும்பளை பகுதியில் இரண்டு இளைஞர்கள் 45 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன், தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
