வவுனியாவில் கஞ்சாவுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது!
வவுனியாவில் கேரளா கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த இளம் சட்டத்தரணி உட்பட மூன்று பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருப்பதாக செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது 700 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். இதேவேளை, வவுனியா நகர்ப்பகுதியில் கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேரை வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri