திருகோணமலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் வீடுகளை உடைத்துக் களவாடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ள நிலையில், திருடிய பொருட்களை வாங்கி தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் (26) நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ -சுவர்ண ஜெயந்திபுர பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் சதுரங்க (27 வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வீட்டினை உடைத்த சந்தேகநபரை விசாரணை செய்தபோது இன்னுமொரு வீட்டை உடைத்து வீட்டிலிருந்த உலர் உணவுப் பொருட்களைத் திருடி விற்பனை செய்ததாகவும், வீட்டிலிருந்தவர்கள் மரண வீடொன்றுக்குச் சென்ற போதே இந்த வீட்டை உடைத்ததாகவும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நபரிடம் திருடிய பொருட்களை வாங்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து குளிர்சாதனப்பெட்டி, வானொலிப் பெட்டி (பொக்ஸ்) மற்றும் கேஸ் சிலிண்டர் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடிய பொருட்களை வாங்கி தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த முதித பிரசன்ன விஜேரத்ன ( 27 வயது), எச்.ஏ.பியசேன (51வயது) ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
