முல்லைத்தீவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் நேற்றையதினம்(03.09.2024) குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும் , வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்குறுதிகளை கூறி மக்களிடம் 200 ரூபா பெறப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சிலரால் படிவம் பூரணப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களிடம் இருந்த படிவங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள் இருவர் மற்றும் வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri