போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது(Photos)
வரக்காபொல பிரதேசத்திலிருந்து மட்டக்களப்புக்கு கனரக வாகனம் ஒன்றில் 45 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்தி சென்ற மூவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் நேற்று இரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸார் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதி நாவலடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பை நோக்கி இரும்பு அலுமாரிகளை ஏற்றி வந்த கனரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது 45 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன், 3 பேரைக் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இரும்பு அலுமாரி விற்பனைக்காக மட்டக்களப்புக்கு கனரக வாகனத்தில் எடுத்துவரும் போது அதில் ஐஸ் போதைப் பொருளையும் வியாபாரத்துக்காகக் கடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்களை
நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
