போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக நேற்றையதினம்(07.11.2025) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |