நாட்டின் முக்கியஸ்தர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்! செய்திகளின் தொகுப்பு
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) மற்றும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரான தேசபந்து கரு ஜயசூரிய(Karu Jayasurya) ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களுடன், வெளிநாட்டிற்குச் சென்றுள்ள வெகுசன ஊடகமொன்றின் ஆசிரியர் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne), ஷானி அபேசேகர ஆகியோரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரான தேசபந்து கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதானது, ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி தரப்பிலிருந்தே ஏற்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
இதற்கு கிலி மஹாராஜாவின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததாக முன்னர் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
