மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பிக்கு அச்சுறுத்தல்
இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்புகையிலேயே மாவை தரப்பின் சில ஆதரவாளர்களால் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்
மேலும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு வருகைத்தர வேண்டாம் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் இருந்த ஒரு சிலரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
