பாதாள குழு மிரட்டல்! தேசபந்து விவகாரத்தில் தீவிர விசாரணை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானி இம்ரானிடமிருந்து மிரட்டல்கள் வரக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில், சிறப்பு விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கஞ்சிபானி இம்ரானிடமிருந்து மிரட்டல்கள் வரக்கூடும் என இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தமையை தொடர்ந்து இந்த விகாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரான், தேசபந்து தென்னகோனைக் கொலை செய்ய தனது உறவினர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசபந்து தென்னகோன்
இதன் காரணமாகவே தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்பு விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய தகவல்களின் உண்மை மற்றும் பொய்மை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுர்கிரிய பொலிஸார் தேசபந்து தென்னகோனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
