யாழில் தொழில் தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்
தொழில் தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19,147இற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில பிரச்சினைகளை பார்க்க அதிக உயர்வாக காணப்படுகின்றது.

மத்திய வங்கியின் வருடாந்த தகவல்
21 சதவீதமானோர் வட மாகாணத்தில் வேலையற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன.
யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது.

எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam