கிளிநொச்சியில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் இன்று(01.04) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது.
வேண்டுகோள்
அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி இராணுவம் வசமுள்ளது.
மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வேண்டுகோள்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
