IMF இன் ஆதரவு தேவை என்று கூறுபவர்கள் துரோகிகள் - வாசுதேவ நாணயக்கார
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவை என்று கூறுபவர்கள் துரோகிகள் என்றும் அந்த துரோகிகள் ஒவ்வொருவரையும் பிடித்து கடலில் வீச வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் கேள்விகளை எழுப்பவில்லை எனவும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் 16 தடவைகள் தலையீடு செய்துள்ளதாகவும், அந்த தலையீட்டின் விளைவே தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.