சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்: பாரத் அருள்சாமி (Photos)

Sri Lanka Politician Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Thirumal Jun 16, 2022 09:30 AM GMT
Report

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையிலான அரசாங்கத்தின் தவறாக வரிக்கொள்கைகளும் பிரதான காரணமாகும் என இ.தொ.காவின் உபதலைவரும், பிரஜா சக்தி திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி - இம்புல்பிட்டிய பிரதேசத்துக்கான குடிநீர் திட்டத்தினை திறந்து வைக்கும் வைபவம் இன்று இடம்பெற்றிருந்தது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமியின் வேண்டுகோளிற்கு அமைவாக ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் ஒரு கோடி ரூபா நன்கொடையின் கீழ் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் திட்டம் அமைப்பு 

சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்: பாரத் அருள்சாமி (Photos) | Those Who Put Forward Better Policies Support

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மொகமட் அலியார், பணிப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 600 குடும்பங்களை உடைய 1500 பயனாளிகள் பயனடையவுள்ளதாக தெரியவருகிறது. 

சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்: பாரத் அருள்சாமி (Photos) | Those Who Put Forward Better Policies Support

30 வருட காலமாகக் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வந்த இம்புல்பிட்டிய பிரதேச மக்களுக்குக் குடிநீர் திட்டத்தைச் செய்து கொடுத்த ஹல்நூர் தொண்டு நிறுவனத்தினருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி பொன்னாடை போர்த்தி ஞாபகார்த்த சின்னங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு இன்று ஏதேனுமொரு விடயத்துக்காக வரிசைகளில் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை வெகுவிரைவில் மாறி, இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மாயவலைக்குள் சிக்கியுள்ள மக்கள் 

சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்: பாரத் அருள்சாமி (Photos) | Those Who Put Forward Better Policies Support

எனவே, மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவு வழங்கும். பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் வரி வருமானம் குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பாதிக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும். இனம், மதம், மொழி, கட்சி என 'பிரித்தாளும் தந்திரம்' மூலம் தமது இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் வாதிகள் முற்பட்டனர்.

அந்த மாய வலைக்குள் மக்களும் சிக்கினர். இன்றைய பின்னடைவுக்கு மக்கள் பிரிந்து நின்றமையும் ஓர் காரணம்.

எனவே, நாம் இலங்கையர்களாகப் பயணிப்போம். சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை ஆதரிப்போம். அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில் இ.தொ.கா. நடுநிலை நிலைப்பாட்டை வகித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்: பாரத் அருள்சாமி (Photos) | Those Who Put Forward Better Policies Support

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US