இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் தேவையில்லை
இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு வருபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் தேவையில்லை என்று பாகிஸ்தான் பொது வானூர்தி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பி.சி.ஆர் சோதனை இல்லாமல் மக்கள் பாகிஸ்தானுக்கு பயணிக்கக்கூடிய ‘வகை ஏ’ பட்டியலிடப்பட்ட நாடுகளில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் அஸ்திரேலியா, பூட்டான், சீனா, பிஜி, ஜப்பான், கஸகஸ்தான், லாவோஸ், மவுரித்தேனியா, மங்கோலியா, மொரோக்கோ, மியான்மர், நேபாளம், நியூசிலாந்து, தென் கொரியா, சவுதி அரேபியா, இலங்கை, சிங்கப்பூர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, தஜிகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்குகின்றன.
புதிய விதிகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5 வரை நடைமுறைக்கு வரும் என்று பாக்கிஸ்தான் பொது வானூர்தி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பொட்ஸ்வானா, பிரேசில், கொலம்பியா, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், பெரு, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு பாகிஸ்தான் தற்காலிக தடையை விதித்துள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் News Lankasri