யாழ். சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு செல்ல முற்பட்டவர்கள் கைது
யாழ். சிறைச்சாலைக்குள் உணவு பொதியினுள் மறைத்து கஞ்சா மற்றும் ஹெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறையில் இருக்கும் தனது கணவருக்கு உணவுப் பொதியில் மறைத்து வைத்து ஹெரோயின் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு ஹெரோயின் கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது நண்பரை பார்வையிடுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
