தையிட்டி விகாரை விவகாரம்:சிவசேனை அமைப்பினர் வழங்கியுள்ள உறுதி
தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்.
கோரிக்கை
இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடன் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.
அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |