மருந்துகளை பதிவு செய்வதில் நீண்டகால தாமதத்திற்கு இதுதான் காரணம்
நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்பட்டமையை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்திய கலாநிதி கமல் ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார். பணியாளர்களின் வெற்றிடமே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் தற்போது 23 ஆக உள்ள பணியாளர்கள் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்வதில் தாமதமான மருந்துகளில் காசநோய், மலேரியா எதிர்ப்பு, இரத்த புற்றுநோய், வலிப்பு, எச்.ஐ.வி- எய்ட்ஸ், மனநல நோய்கள், கடுமையான முன்-எக்லாம்ப்சியாவில் வலிப்புத்தாக்கங்களைத் தடுக்கும் மருந்துகள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்துகளை பதிவு செய்ய நான்கு முதல் எட்டு மாதங்கள் தாமதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்




