ஜெனீவா பிரச்சினைக்கு இதுவே காரணம்! - ஹர்ச டி சில்வா
சர்வதேசத்துக்கு அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையாலேயே ஜெனீவா பிரச்சினைக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஐக்கிய நடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஒரு வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.இதில் இலங்கை தனக்கு சார்பான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியானது நீதி, நேர்மை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை சார்ந்து செயற்படும் ஒரு கட்சியாகும்.
சகல பிரச்சிணைகளையும் சகல இன மக்களையும் இனைத்துக் கொண்டு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கும் கட்சியாகும். ஜெனீவா விவகாரத்தையும் அவ்வாறே தீர்க்க முடியும்.
இலங்கை முகம் கொடுத்துள்ள பிரச்சினை யுத்த காலப் பிரச்சினையல்ல. கடந்த ஒரு வருட காலப் பகுதியில் இந்த அரசாங்கம் கடைப்பிடித்த ஜனநாயக விரோத செயற்பாடு மற்றும் மனித உரிமைகளுக்கெதிரான தடைகள், சிவில் நிர்வாகம் இராணுவமயமாக்கப்படல் போன்ற காரணங்களை வைத்துத் தோன்றியவையாகும் என்றார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
