என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் இது - சஞ்சு சாம்சன்
நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த வெற்றிக்கு முக்கிய தூணாக நின்ற சஞ்சு சாம்சன், தனது அபாரமான ஆட்டத்திற்காகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 'ஆட்டநாயகன்' விருதைத் தட்டிச் சென்றார்.
நடைபெறவுள்ள இறுதிப்போட்டி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை குவித்த சாம்சன், நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 89 ஓட்டங்களை விளாசினார்.
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஹ்மதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட சஞ்சு சாம்சன் "இது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. சுமார் 300 முதல் 400 T20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு.
ஆட்டத்தின் போக்கை மாற்ற
1 முதல் 6 வரையிலான அனைத்து இடங்களிலும் துடுப்பாட்டம் செய்திருக்கிறேன், ஐபிஎல் அணியை வழிநடத்தியிருக்கிறேன். இந்த அனுபவம் தான் அணிக்கு அந்த நேரத்தில் என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது." என கூறினார்.
வான்கடே மைதானத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சாம்சன், பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அத்துடன் "இப்போதெல்லாம் பவர்பிளே ஓவர்களிலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. நானும் அபிஷேக் சர்மாவும் இஷான் கிஷனும் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்," என்று சாம்சன் கூறினார்.
இந்திய அணியில் 8-வது வீரர் வரை துடுப்பாட்டம் செய்யும் வசதி இருப்பதால், விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் பயமின்றி விளையாட முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri