இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் அதிகரிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்ததை விடவும் தற்பொழுது ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பான தர சுட்டெண்ணின் அடிப்படையில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்த எண்ணிக்கையை விடவும் தற்பொழுது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நல்லாட்சி அரசாங்க காலத்தை விடவும் தற்பொழுது நாட்டில் ஊழல் இடம்பெறுகிறது என்பதை புரிந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி மோசடி, துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை உள்ளிட்ட பல மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியில் பணம் காணாமல் போன விவகாரம் போன்றவற்றின் ஊடாக நாட்டில் ஊழல் குறையவில்லை என்றே அர்த்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 24ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் இடம் பெற்ற விடயங்களை பற்றி தாம் பேச விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.