அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஓர் பொய் மூட்டை
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனை ஓர் பொய் மூட்டை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க பட்ட போது சிரித்துக் கொண்டும், சுற்றிச் சுற்றியும், சத்தமாகவும், மெதுவாகவும் பேசி இந்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர சமர்ப்பித்ததனை நாம் அவதானித்தோம் என சஜித் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வரவு செலவு திட்டமானது பொய்களினால் நிரப்பப்பட்ட ஒரு பொய் சாக்கு மூட்டை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டமானது முழுக்க முழுக்க பொய்களினாலும் ஏமாற்று வார்த்தைகளினாலும் நிரம்ப பெற்ற ஒன்றாகும் இதன் ஊடாக தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அனாதைகளாக்கி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் பிரதான கொள்கை பொய்களை சமூக மயப்படுத்துவது என்பது தெரிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஹிட்லர் கோபேல்ஸ் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுகின்றது, தொடர்ச்சியாக இடைவிடாது பொய்களை உரைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
கோபால்ஸின் கொள்கைக்கு அமைய இந்த பொய்களை தொடர்ச்சியாக கூறி சமூகத்தில் தொடர்ந்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்புகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan