அம்பாறையில் நடந்த முழுநிலாக்கால நிகழ்வும் திருவள்ளுவர் விழாவும்
அம்பாறையில் பண்பாட்டு பணிமனையின் முழுநிலாக்கால நிகழ்வும் திருவள்ளுவர் விழாவும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு (05.11.2025) நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இந்த ஆண்டு தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளியின் முதல்வர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் நிதிப்பங்களிப்பில் தந்தையார் அமரர் வைத்தியக்கலாநிதி கந்தர்.பொன்னம்பலம் அவர்களின் நூற்றாண்டு நினைவாக பண்பாட்டுப் பணிமனை வழாகத்தின் முகப்பில் 6 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையொன்று நிறுவப்பட்டிருந்தது.
பண்பாட்டுப் பணிமனை
அம்பாறையில் நிகழும் பண்பாட்டு விழாவான திருவள்ளுவர் விழாவில் பங்குபற்றும் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் சான்றோர்களுக்கான நினைவு அடையாள பரிசில் (கேடையங்களை) நினைவுப்பதக்கங்கள் போன்ற மதிப்பளிப்புக்கான நிதியினையும், அரங்க அமைப்பிற்கான நிதியினையும் பேர்ண் வள்ளுவன் பள்ளியின் முதல்வர் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடனும், திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலைகள் அணித்தலுடனும் தமிழ்த்தாய் வாத்துப்பாடலுடனும் ஆரம்பித்தது.

மாணவர்களின் கலைநிகழ்வுகளும், பெரியோர்களின் உரைகளும், ஆடற்கலை நடனங்களும், பாடல் நிகழ்ச்சிகளும், பரசில்கள் வழங்கல், மதிப்பளித்தல் நிகழ்வுகளுடன் பண்பாட்டுப் பணிமனையின் முழுநிலா பண்பாட்டு ஏற்பாட்டு நிகழ்வுகளும், திருவள்ளுவர் விழாவும் சிறப்பாக நிறைவுற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri