திருக்கோணேஸ்வர ஆலய நில ஆக்கிரமிப்பு: தடுப்பதற்காக அடியார்கள் எடுத்துள்ள முதற்கட்ட நடவடிக்கை (Photo)
திருக்கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் நோக்கில் அடியவர்களின் யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
இந்த யாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று (17.09.2022) ஆரம்பமாகியுள்ளது.
சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானம்
கடந்த 11ஆம் திகதி நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவாரப் பாடல் பெற்ற தலமாக திருக்கோணேஸ்வர ஆலயம் காணப்படுகின்றது.

ஆலய நில ஆக்கிரமிப்பு
இவ்வாறு சிறப்பு பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தின், ஆலய நிலம் அரசாங்கத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக படம்: ராகேஷ்
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam