திருக்கோணேஸ்வரம் விவகாரம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு
திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கை
இதேவேளை, திருகோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் நாங்கள் சகல தரப்பினரதும் விடயங்களுக்கு செவிமடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதன்படி அவர் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.
குறிப்பாக அரசியலமைப்பு மாற்றம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன தொடர்பாக பேசப்பட்டிருக்கின்றது. இவை மிகவும் சவாலான விடயங்கள்.
வடக்கு - கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
எனினும் ஜனாதிபதி அறிவித்த விடயங்களை மற்றும் அவர் தனது கொள்கை பிரகடன உரையில் முன் வைத்து விடயங்களை முன்னெடுத்து செல்வார்.
வடக்கு - கிழக்கில் காணப்படுகின்ற விசேட பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்த விடயங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதில் முன்னேற்றங்களையும் ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
