மீண்டும் உலக சாதனை படைத்த திருச்செல்வம் : அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
உலக சாதனை படைத்துள்ள திருச்செல்வத்தின் தொடர் முயற்சிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ்ப்பாணத்திலும் வலு சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன், குறித்த 2600 கிலோ எடை கொண்ட உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை தனது கழுத்தினால் இழுத்து சாதனை படைத்ததுள்ளதுடன் அது உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது.
கௌரவிப்பு
குறித்த சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு அனுசரணை வழங்கியிருந்த நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அவை வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |