மொழி தெரிந்திருந்தால் முப்பது ஆண்டுகால யுத்தம் இடம்பெற்றிருக்காது : அத்துரலிய ரத்தனதேரர்
தமிழ் மக்களுக்கு சிங்கள மொழியும் , சிங்கள மக்களுக்கு தமிழ் மொழியும் தெரிந்திருந்தால் 30 வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றிருக்காது என நினைக்கிறேன் என்று இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்தனதேரர் (Athuraliye Rathana Thero) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாம் மொழிக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் ஆட்சி சரியானதா என்ற கேள்விக்கு மத்தியில் பிரச்சினைகளை கூறுவதிலும் பார்க்க நாட்டில் உள்ள காணிகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
நாட்டில் முதுகெலும்பான விவசாயத்துறையை ஊக்குவிக்க, மக்களுக்கு காணிகளை வழங்க வேண்டும்.
எரிவாயு அடுப்புகள் வெடிக்கிறது ஏன் ஒவ்வொருவரும் இயற்கை வாயுவை உற்பத்தி செய்ய முடியாது? வீட்டுக்கு ஒரு பசுவை வளர்த்தால் தொழில் முயற்சியை மேம்படுத்துவதோடு இயற்கை வாயுவையும் உற்பத்தி செய்யலாம்.
ஆகவே நாட்டை வழிநடத்துபர்களுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறது ஆகையால் மக்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கு வழி அமைப்பார்கள் என நம்புகிறேன் என இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.



