மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 57 கோவிட் தொற்றாளர்கள் பதிவு
கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9148 பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 57 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 3637 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், 54 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் கடந்த ஏழு தினங்களில் 707 கோவிட் தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9148 பேருக்கு கோவிட்
தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
