கனடாவில் பானம் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட நோய்க்கிருமிகள்: இதுவரை மூவர் உயிரிழப்பு
கனடாவில் பானம் ஒன்றை அருந்திய மூவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பானங்கள்
ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இதன்போது, Silkஎன்னும் பெயர் கொண்ட almond milk, coconut milk, almond-coconut milk and oat milk மற்றும் Great Value பெயருடைய almond milk ஆகிய பானங்களே நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த பானத்தை அருந்திய 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மூன்றவாதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam