திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் வருட நினைவு
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட தூஆ பிரார்த்தனை நிகழ்வு நேற்று (23) காலை 9:00 மணிக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் எம் கனி தலைமையின் கீழ் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம் பெற்றது.
இதன்போது கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள் மதரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த கால அரசியல்
2021.11.23 அன்று குறித்த படகு பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய் உட்பட சுமார் 08 அப்பாவி உயிர்கள் பலி போனது.

ஆனால் குறித்த குறிஞ்சாக்கேணி கேணி பாலம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமை கடந்த கால அரசியல் வாதிகளால் வெறும் அடிக்கல் நடப்பட்டு ஏமாற்றம் மாத்திரமே.
இப் பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
ஒரு பகுதி இடிந்து விழும் நிலை
பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இது விடயமாக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

மேலும் ஆளும் கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திர குறித்த பாலத்தில் பால புனரமைப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றையும் கடந்த காலத்தில் முன்வைத்திருந்தார்.
எனவே அநுர குமார அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam