பிரபல இந்தி திரைப்பட நடிகரை பயன்படுத்தி பாரிய மோசடியை திட்டமிட்ட திலினி பிரியமாலி
பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனை இலங்கைக்கு அழைத்து மிகப் பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த திக்கோ நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி திட்டமிட்டிருந்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர்.
கோடிக்கணக்கான செலவில் அமிதாப் பச்சனின் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்ட திலினி
செல்வந்தர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், பௌத்த பிக்குகளை ஏமாற்றி பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு, கொழும்பில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிரு்நத நிலையில், திலினி பிரியமாலியை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்ததாக அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பல பிரபல நடிகர், நடிகைகளை அழைத்து நடத்தப்படவிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் திட்டமிட்டிருந்தாக தெரியவருகிறது.
திலினி பிரியமாலியின் திக்கோ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “மாயாஜால” என்ற திரைப்படத்தின் விழா ஒன்று கடந்த மார்ச் 19 ஆம் திகதி கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் நடத்தப்பட்டது.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய செலவில் நடத்தப்பட்ட திரைப்பட நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இலங்கை திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய செலவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல நடிகை மௌனி ரோய் (சிவன்யா) உட்பட நடிகர், நடிகைகளும் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி, திலினி பிரியமாலி, தமது மோசடி திட்டத்தை வேகப்படுத்தியுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் தலைமையிலான நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலத்தை பயன்படுத்தி, மேலும் மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட திலினி பிரியமாலி திட்டமிட்டிருந்தாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
